ராதாபுரம்: வீடு தீப்பிடித்ததில் ரூ. 1 லட்சம் மதிப்பு பொருட்கள் சேதம்

ராதாபுரம்: வீடு தீப்பிடித்ததில் ரூ. 1 லட்சம் மதிப்பு பொருட்கள் சேதம்
X

விபத்தில் சாம்பலான வீடு. 

ராதாபுரம் அருகே வீடு தீப்பிடித்து எரிந்ததில், ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே வையக்கவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் சோவித்(25) லாரி டிரைவர். வீட்டின் முன்பு ஆஸ்பெஸ்டாஸ் ஓடு வேய்ந்துள்ளார். கோடைகாலம் என்பதால் சூடு தணிய ஓட்டின் மீது காய்ந்த தென்னை ஓலைகளை மேலே போட்டிருந்திருக்கிறார். மேலும் வீட்டின் முன்புறம் தென்னை ஒலையால் குடிசையும் அமைத்துள்ளார்.

இந்நிலையில், திடீரென எதிர்பாராத விதமாக, ஓட்டின் மேல் உள்ள ஓலையில், மின் கசிவினால் தீப்பிடித்துள்ளது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் தண்ணீர் விட்டு தீயை அணைக்க முயற்சித்தனர். எனினும், தீ கட்டுக்கடங்காமல் மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

இதில், அவரது வீடு முழுவதும் எரிந்து சேதமடைந்தது. வீட்டின் உள்ளிருந்த துணி மணிகள், பீரோ மற்றும் நிறுத்தி வைத்திருந்த ஒரு மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சுமார் ரூ. 1லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாயின. இது குறித்து ராதாபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!