புளியங்குடியில் மரக் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 50 லட்சம் மதிப்புள்ள மரச்சாமான்கள் சேதம்

புளியங்குடியில் மரக் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 50 லட்சம் மதிப்புள்ள மரச்சாமான்கள் சேதம்
X

புளியங்குடி அருகே மரக்கடையில் ஏற்பட்ட தீவிபத்து.

புளியங்குடியில் மரக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தினால் 50 லட்சம் மதிப்புள்ள மரச்சாமான்கள் தீயில் எரிந்து சாம்பலாகின

புளியங்குடியில் மரக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தினால் 50 லட்சம் மதிப்புள்ள மரச்சாமான்கள் தீயில் எரிந்து சாம்பலாகின 3 தீயணைப்பு வாகனங்கள் 5 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான மரக்கடையில் அதிகாலை தீயில் எரிந்து கொண்டிருப்பதாக அப்பகுதி வழியாக சென்றவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், கடையநல்லூர் ஆகிய இடங்களிலிருந்து விரைந்து சென்ற 30 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் நான்கு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு அலுவலர் கவிதா சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டார். தீ விபத்து சம்பந்தமாக புளியங்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!