மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை கைது

மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை கைது
X

தென்காசி மாவட்டத்தில் மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அவரது தந்தை கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், குருவிகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அழகு நாச்சியார்புரம் பகுதியில் வசித்து வரும் சேகர்(48) என்பவர் அவரது குடும்பத்தை கவனிக்காமல் சரிவர வீட்டிற்க்கும் வராமல் வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இது குறித்து சேகரின் மகள் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த சேகர் அவரது மகளை அசிங்கமாக பேசி இனி நீ வீட்டில் இருந்தால் உன்னை உயிருடன் தீ வைத்து கொலை செய்துவிடுவேன் என கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.இதுகுறித்து சேகரின் மகள் குருவிகுளம் போலீசில் கொடுத்த புகாரின் பெயரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு சேகர்(48) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்