பெரியார் -அண்ணா பூமியில் பாசிச கட்சிகள் காலூன்ற முடியாது: நாஞ்சில் சம்பத்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் பிரசாரம் செய்த நாஞ்சில்சம்பத்
பெரியார் அண்ணா பூமியில் பாசிச கட்சிகள் காலுன்றவும் முடியாது கடை நடத்தவும் முடியாது என்றார் நாஞ்சில் சம்பத் .
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட 16வது வார்டு திமுக வேட்பாளர் கருணாநிதி, 15வது வார்டு மதிமுக வேட்பாளர் மணிமாலா, ஆகியோரை ஆதரித்து பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பிரசாரம் மேற்கொண்டார்.
எந்த கட்சி வலுவாக உள்ளதோ அந்த கட்சியோடு கூட்டணி வைத்துக் கொண்டு ,அந்த கட்சியை தனதாக்கிக் கொள்கிற கபளீகரம் அரசியலை முன்னெடுத்து வருகின்ற காலகட்டத்தில் எங்கே வேண்டுமென்றாலும் காலூன்றாலம் கடை நடத்தலாம் ஆனால் பெரியார் அண்ணா பூமியில் காலூன்றவும் முடியாது கடை நடத்தவும் முடியாது என நிரூபிக்க வேண்டிய கடமை எங்களுக்கும் எங்கள் முன்னால் உள்ள மக்களுக்கும் அதை உணர்த்த வேண்டிய உரிமை உள்ளது. பாசிஸ்டுகளின் உடைய பழிக்கு நீங்களும் நானும் பலிகடா ஆகாமல் நாட்டை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
எல்லா பொதுத்துறை சொத்துகளையும் சூறையாடி நாடாளுமன்ற ஜனநாயகத்தின் இயல்பையே பாழாக்கி இந்தியாவின் மிக குறைந்த விலைக்கு விற்ககூடிய கூட்டத்தின் பிடியிலிருந்து தேசத்தை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. கோவில்பட்டியில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வெற்றி பெற்ற செய்தி கேட்டால் கோவில்பட்டியில் அடிக்கிற அடி, லக்னோவில் இருக்கிற ஆதித்யநாத் கன்னத்தில் விழும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
ஸ்டாலின் பதவி ஏற்ற பின்பு பள்ளத்தாக்கில் கிடந்த தமிழகத்தை சமவெளியில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்.எடப்பாடி பழனிசாமி என்னும் எட்டு வழி சாலை பேர்வழியை இந்த நாட்டிலே யார் என்று தெரியாத ஒரு அரசியல் அனாதையை சசிகலா முடிசூட்டி பார்த்து, அந்த சசிகலாவுக்கு துரோகம் செய்து அருந்தமிழ் நாட்டுக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டு உரிமையை எல்லாம் கொண்டு போய் அடகு வைத்தார்கள்.எனவே உங்களது வாக்குகள் பாறையில் விதைத்து பலனின்றி போகாமல் வாக்கு அளிக்க வேண்டிய சின்னம் உதய சூரியன் என்று கூறி வாக்கு சேகரித்தார்.
பிரசாரத்தில் ஒன்றியச் செயலாளர் பீக்கிலிப்பட்டி முருகேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் அழகுமுத்துப்பாண்டியன், மதிமுக வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், மதிமுக மாணவரணி செயலாளர் விநாயக ரமேஷ்,மதிமுக நகரச் செயலாளர் பால்ராஜ், மதிமுக மத்திய பகுதி ஒன்றியச் செயலாளர் சரவணன், உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu