பாத்ரூமில் வழுக்கி விழுந்து விவசாயி உயிரிழப்பு: சங்கரன்கோவில் அருகே சோகம்

பாத்ரூமில் வழுக்கி விழுந்து விவசாயி உயிரிழப்பு: சங்கரன்கோவில் அருகே சோகம்
X
சங்கரன்கோவில் அருகே பாத்ரூமில் வழுக்கி விழுந்து விவசாயி உயிரிழப்பு. அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சங்கரன்கோவில் அருகே பாத்ரூமில் வழுக்கி விழுந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள உமையத் தலைவன் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி (69) விவசாயி. இவருக்கு இரத்த அழுத்தம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 9-ந் தேதி பாத்ரூமில் தவறி விழுந்து காயமடைந்தார்.

இதனால் அவரது உறவினர்கள் விவசாயி கந்தசாமியை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று இரவு உயிரிழந்தார். இது குறித்து திருவேங்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story