தென்காசியில் பனை தொழிலாளர்களுக்கான தொழிற்சாலை ஆலோசனை கூட்டம்

தென்காசியில் பனை தொழிலாளர்களுக்கான தொழிற்சாலை ஆலோசனை கூட்டம்
X

இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில் பனை தொழிலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில் பனை தொழிலாளர்களுக்கான தொழிற்சாலை கலந்தாய்வு நிகழ்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம்.

இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில் பனை தொழிலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் பனைத்தொழிலாளர்கள் நலன் கருதி பனை தொழிலாளர்களை பங்குதாரர்களாக ஒன்றிணைத்து பனை பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை தொடங்குவது குறித்த கலந்தாய்வு நிகழ்ச்சி வரும் 06.12.2021 திங்கள்கிழமை மாலை 3 மணிக்கு கலிதீர்த்தான் பட்டியில் உள்ள சிவசக்தி மகாலில் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிறுவனத் தலைவர் ராகம் சௌந்தரபாண்டியன் நாடார் மற்றும் மாநில நிர்வாகிகள் வருகை தர இருக்கிறார்கள்.

இந்த கலந்தாய்வு நிகழ்ச்சியை சிறப்பாக நடைபெற உள்ளது. இது குறித்த ஆலோசனைக்கூட்டம் தென்காசி மாவட்டம், இலந்தைகுளத்தில் இதற்கான ஆலோசனை கூட்டம் இந்திய நாடார்கள் பேரமைப்பின் மாநில துணைத்தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் நடைபெற்றது இந்த ஆலோசனைக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக அங்கு உள்ள பெருந்தலைவர் காமராஜர் திருஉருவ சிலைக்கு மாநில துணைத் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார், மாவட்ட இளைஞரணி செயலாளர் முருகன், பெருந்தலைவர் காமராஜர் ஆகிேயார் மாலை அணிவித்து மரியாதை செய்து ஆலோசனைக் கூட்டத்தை தொடங்கினர்.

சிறப்புரையாற்றிய லூர்து நாடார் பேசும்போது; தென்காசி மாவட்டத்தில் ஆயிரம் பனை தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் உயர்ந்த நோக்கத்தில் பனைமரம் ஏறும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தமிழகத்தில் பனை தொழிலை பாதுகாக்கவும், பனை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பொருட்களை தமிழகம் முழுவதும் சந்தைப்படுத்தவும், பனை பொருளில் இருந்து கிடைக்கக்கூடிய உணவுப் பொருள்களை உலக அளவில் சந்தைப்படுத்தவும், இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் ராகம் சௌந்தரபாண்டியன் நாடார் கடின முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

பதநீர், நுங்கு, பனை ஓலை, பனை நார் மற்றும் பனை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பொருட்களை கொண்டு நவீன இயந்திரங்கள் மூலம் கருப்பட்டி, பனங்கற்கண்டு பதப்படுத்தப்பட்ட நுங்கு மற்றும் பல்வேறு உணவு பொருள்களை தயாரிப்பதற்கான தொழிற்சாலை விரைவில் தென்காசி மாவட்டத்தில் தொடங்கப்பட உள்ளது.

இந்த தொழிற்சாலை பனை தொழிலாளர்களையும் பங்குதாரர்களாக ஒன்றிணைத்து துவங்கப்பட உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொண்டார் இந்த தொழிற்சாலை சம்பந்தமான கலந்தாய்வு நிகழ்ச்சி கலிதீர்த்தான் பட்டியில் திங்கள்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெற இருக்கிறது இந்த கூட்டத்திற்கு பனைமரம் ஏறும் தொழிலாளர்களும் "பனை மரம் காப்போம்" என்ற ஒருமித்த கருத்துடைய நாடார் சமுதாய சொந்தங்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊர் நிர்வாகிகள், ஊர் பெரியவர்கள் திரளாக கலந்து கொண்டார்கள. மேலும் புதுப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் பால் விநாயகம் ஊராட்சி மன்ற துணை தலைவர் வேல்துரை, காத்த புறம் ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ், இலந்தைகுளம் ஊர் தலைவர் சக்திவேல், ஊராட்சி மன்ற தலைவர் பூசைதுரை, ஊராட்சி மன்ற துணை தலைவர் கோடீஸ்வரன் ஆகியோருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு மேற்கண்ட கலந்தாய்வு நிகழ்ச்சி கலந்துகொண்டு சிறப்பித்து தருமாறு கேட்டுக்கொண்டார். முடிவில் ஊர் நாட்டாமை சக்திவேல் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags

Next Story
வீட்டுமனை பட்டா வழங்க கோரி விவசாய சங்கங்கள் வலியுறுத்தல்