முன்னாள் முப்படை வீரர்கள் ஒருங்கிணைப்பு சங்க ஆலோசனைக் கூட்டம்

முன்னாள் முப்படை வீரர்கள் ஒருங்கிணைப்பு சங்க ஆலோசனைக் கூட்டம்
X

சங்கரன் கோவிலில் முன்னாள் முப்படை வீரர்கள் ஒருங்கிணைப்பு சங்க  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சங்கரன் கோவிலில் முன்னாள் முப்படை வீரர்கள் ஒருங்கிணைப்பு சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சங்கரன்கோவிலில் இ.சி.ஹெச்.எஸ் .மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி தென்காசி மாவட்ட முன்னாள் முப்படை வீரர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் முன்னாள் முப்படை வீரர்கள் ஒருங்கிணைப்பு சங்கத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சங்கத்தின் புதிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். கூட்டத்தில் சங்கரன் கோவில், திருவேங்கடம் , கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சிவகிரி உள்ளிட்ட தாலுகாக்களில் சுமார் 8500க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற முப்படை வீரர்கள் மற்றும் அதைச் சார்ந்த குடும்பத்தினர் இருப்பதால் தென்காசி மாவட்டத்திற்கு சங்கரன் கோவிலை தலைமையிடமாக கொண்ட முன்னாள் படை வீரர்கள் அலுவலகம் மற்றும் சி எஸ் டி கேன்டின், இசிஹெச்எஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் எனவும்,வறுமை கோட்டின் கீழ் உள்ள முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வீடு மற்றும் நிலம் இல்லாதவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் இலவச வீட்டு மனை பட்டா தமிழக அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்வில் சங்க நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!