தென் மாவட்டத்தின் புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச் சந்தை

தென் மாவட்டத்தின் புகழ்பெற்ற  எட்டயபுரம் ஆட்டுச் சந்தை
X

தென்காசி மாவட்டம் எட்டயபுரம் மாட்டுச்சந்தை

Ettayapuram Goat Market-தென் மாவட்டத்தின் புகழ்பெற்ற கோவில்பட்டி அருகே எட்டயபுரம் ஆட்டுச் சந்தை கொரோனா விதிமுறைகளுடன் நடைபெற்றது

Ettayapuram Goat Market-தென் மாவட்டத்தின் புகழ்பெற்ற கோவில்பட்டி அருகே எட்டையாபுரம் ஆட்டுச் சந்தை-கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து சந்தையில் விற்பனை நடைபெற்றது.

தென் மாவட்டத்தின் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தையாக தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ளது எட்டயபுரம் ஆட்டுச் சந்தை இங்கு வாரம் சனிக்கிழமை அன்று ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம் இங்கு தூத்துக்குடி, திருநெல்வேலி,தென்காசி, விருதுநகர்,மதுரை, ராமநாதபுரம்,தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளைக் விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

மேலும் இங்கு ஒரு கோடி ரூபாய் முதல் மூன்று கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெறும்.இதே திருவிழாக்கால ஐந்து கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெறுவது வழக்கம். தற்போது தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக ஆட்டுச்சந்தை நடத்த அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், இன்று ஆட்டுச்சந்தை கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து நடத்தப்பட்டது. கொரோனாதடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வியாபாரிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர் மேலும் ஒவ்வொரு ஊர் வாரியாக உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.பின்னர் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டும் ஆடுகளை வாங்க உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும் அனைவருக்கும் சானிடைசர், தெர்மாமீட்டர் கொண்டு சோதனை செய்யப்பட்டது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடர்ந்து சந்தை இல்லாததால் பெரிய அளவில் விற்பனை நடைபெறவில்லை இருந்தபோதிலும் இந்த வாரம் கொரோனா விதி முறைகளை கடைபிடித்து விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.இன்று ஆட்டுச்சந்தை கொரோனா விதிமுறைகளுடன் சந்தை நடைபெற்றதால் வியாபாரம் சற்று குறைவாகவே இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்