இருமன்குளம் பள்ளியில் கட்டுரை எழுதும் போட்டி: மாணவர்கள் பங்கேற்பு
இருமனம் குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு கட்டுரை எழுதும் போட்டி நடைபெற்றது.
இந்திய அஞ்சல் துறை சார்பாக நான்காம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று நம்மால் அதிகம் தெரிந்து கொள்ளப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி மாணவ மாணவிகள் அறிந்து கொள்ளும் விதமாக "அதிகம் அறியப்படாத விடுதலைப் போராட்ட வீரர்கள்" அல்லது "2047 எனது பார்வையில் இந்தியா" ஆகிய தலைப்புகளில் அஞ்சல் அட்டையில் கட்டுரை எழுதும் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் வடக்குப்புதூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட இருமனம் குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் இதற்காக தங்களைத் தயார்படுத்திக் கொண்டு ஆர்வத்துடன் இக்கட்டுரைப் போட்டியில் பங்கேற்றனர். பள்ளித் தலைமையாசிரியர் லட்சுமிபிரபா மற்றும் ஆசிரியர்கள போட்டியில் பங்கு கொள்ளும் வண்ணம் மாணவ மாணவிகளை தயார் செய்தனர். இப்போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவிகள் தாங்கள் கட்டுரை எழுதிய அஞ்சல் அட்டைகளை தாங்களே அஞ்சல் பெட்டியில் போட்டனர்.
இதனைத் தொடர்ந்து போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் வடக்கு புதூர் கிளை அஞ்சல் அலுவலர் சபாபதி அவர்கள் பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் இளங்கோ கண்ணன், வேல்முருகன் நாகராஜ், இராஜேஸ்வரி, ஜெயலட்சுமி மற்றும் அஞ்சலக பணியாளர் மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu