ஈரோடு - திருநெல்வேலி ரயிலை செங்கோட்டைக்கு நீட்டிக்க வேண்டும் - ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை

ஈரோடு - திருநெல்வேலி ரயிலை செங்கோட்டைக்கு நீட்டிக்க வேண்டும் - ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை
X

பட விளக்கம்: ரயில் கோப்பு படம்.

தென்காசி வழியாக ஈரோடு - நெல்லை ரெயிலை செங்கோட்டைக்கு நீட்டிக்க வேண்டும் என ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

தென்காசி வழியாக ஈரோடு - நெல்லை ரெயிலை செங்கோட்டைக்கு நீட்டிக்க வேண்டும்- ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை

நெல்லையில் இருந்து மதுரை, திண்டுக்கல், கரூர் வழியாக ஈரோடு செல்லும் நெல்லை - ஈரோடு ரெயிலை அம்பை வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என ரெயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் ராஜா எம்.எல்.ஏ. தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே பொதுமேலாளருக்கு அவர் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- அம்பை வழியாக செங்கோட்டை - தாம்பரம் வாரம் மும்முறை ரெயிலை இயக்கியதற்கு ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் என்ற முறையில் ரெயில்வேக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தாம்பரம் - செங்கோட்டை ரெயில் அம்பை, சேரன்மகாதேவி பகுதி மக்களுக்கு முதன்முறையாக சென்னைக்கு செல்ல நேரடி வசதி கிடைத்துள்ளது.மேலும் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பை, கடையம், பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், நெல்லையில் புறப்பட்டு மணியாச்சி, கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர் வழியாக ஈரோடு செல்லும் வண்டி எண் 16846 நெல்லை - ஈரோடு ரெயிலை அம்பை, தென்காசி வழியாக செங்கோட்டைக்கு நீட்டிக்க வேண்டும் இன்று அவர் அனுப்பிய கோரிக்கை மனுவில் தெரிவித்திருந்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!