இமானுவேல் சேகரன் நினைவு நாள்: அதிமுகவினர் மலர்வளையம் வைத்து மரியாதை

இமானுவேல் சேகரன் நினைவு நாள்: அதிமுகவினர் மலர்வளையம் வைத்து மரியாதை
X

இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர், மற்றும் முன்னாள் எம்பி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர், மற்றும் முன்னாள் எம்பி மலர்வளையம் வைத்து மரியாதை.

இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் இராஜலெட்சுமி மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இமானுவேல் சேகரனாரின் 64வது நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து மரியாதை செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டு நான்காயிரத்திற்கும் மேலான காவல்துறையினர் சோதனை சாவடிகள் அமைத்து சிசிடிவி கேமராக்கள் வைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு அதிமுக சார்பில் நேரில் சென்ற முன்னால் அதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் இராஜலட்சுமி, அதிமுக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா, இராமநாதபுரம் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி