தென்காசி வடகரையில் விளை நிலங்களில் யானைகள் அட்டகாசம்: விவசாயிகள் வேதனை

தென்காசி  வடகரையில் விளை நிலங்களில் யானைகள் அட்டகாசம்: விவசாயிகள் வேதனை
X

தென்காசி வடகரையில் யானைகளால் சேதப்படுத்தப்பட்ட  விளை நிலம் 

தென்காசி மாவட்டம் வடகரையில் விளை நிலங்களில் புகுந்து யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன, விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான வடகரை, அச்சன்புதூர், மேக்கரை, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் நெல், தென்னை, வாழை, பாலா,மா உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் விவசாயிகள் பயிர்செய்து உள்ளனர்.

இந்த பகுதிகளில் இரவு நேரங்களில் யானைகள் புகுந்து தென்னை, மா,வாழைகளை நாசம் செய்வது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு வடகரையில் இருந்து அடவிநயினார் அணைக்கு செல்லும் மேட்டுக் கால் பாசன கால்வாய் பகுதியில் வடகரையை சேர்ந்த முகமது உசேன், மரவா முகமது, என்பவர்களின் வயலுக்குள் புகுந்த யானை கூட்டம் சுமார் 1 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பொதியான நெற்பயிர்களை நாசம் செய்தது. இதை இன்று காலை வயலுக்கு சென்ற விவசாயிகள் பயிர்கள் சேதமானதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து வனத்துறை மற்றும் வேளாண்மை துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும்போது :

கடந்த சில மாதங்களாக இப்பகுதிகளில் அட்டகாசம் செய்து வரும் யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினாலும் மீண்டும் வந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றது.

எனவே யானைகள் விளை நிலங்களுக்குள் புகாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் சோலார் மின் வேலிகள், அகழிகள், அமைத்து நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும் நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!