சங்கரன்கோவிலில் மின்சாரம் தாக்கி இளம்பெண் மரணம்

சங்கரன்கோவிலில் மின்சாரம் தாக்கி இளம்பெண் மரணம்
X
சங்கரன்கோவிலில் மின்சாரம் தாக்கி இளம்பெண் மரணமடைந்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கக்கன் நகர் 3ம் தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ், நெசவு தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி(27). இன்று காலை தண்ணீர் எடுப்பதற்க்காக மின்மோட்டார் சுவிட்சை ஆன் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த மகேஸ்வரிக்கு 2 ஆண்குழந்தைகள் உள்ளது. இது குறித்து சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!