சங்கரன்கோவில், புளியங்குடி, திருவேங்கடம் பகுதியில் தேர்தல் பணி ஜரூர்
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் எனவும் நாளை முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தமிழக தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து, சங்கரன்கோவில், புளியங்குடி ஆகிய இரண்டு நகராட்சி, திருவேங்கடம் பேரூராட்சி பகுதிகளில், அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்பாகவே, சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தனிநபராக வீடு வீடாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அதிமுக திமுக ஆகிய இரண்டு கட்சிகளில் வேட்பாளர்கள் யார் முதலில் அறிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் கட்சியின் தொண்டர்கள் இருந்து வருவதால் சங்கரன்கோவில் பகுதியில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu