தேர்தல் அலுவலருக்கு கலெக்டர் குறிப்பாணை: கண்டித்து ஊழியர்கள் போராட்டம்

தேர்தல் அலுவலருக்கு கலெக்டர் குறிப்பாணை: கண்டித்து ஊழியர்கள் போராட்டம்
X

தென்காசி கலெக்டரை கண்டித்து,  50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

தேர்தல் நடத்தும் அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் குறிப்பாணை அனுப்பியதை கண்டித்து, சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெற்றது. இதனிடையே, தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரா என்பவர், வாக்குச்சாவடி மையங்களில் முறையாக ஏற்பாடுகளைச் செய்யவில்லை எனவும், போதிய அளவு தேர்தல் பணிகளில் ஊழியர்களை பணியமர்த்த வில்லை எனவும் கூறி, இதற்கு விளக்கம் கேட்டு தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலருக்கு குறிப்பானை அனுப்பினார்.

இதனிடையே, விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பிய தென்காசி ஆட்சியரை கண்டித்து, சங்கரன்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் தேர்தல் பணி அலுவலர்கள், 50க்கும் மேற்பட்டோர், அலுவலகம் முன்பு அமர்ந்து தேர்தல் பணிகளை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சற்று பரபரப்பு நிலவியது.

Tags

Next Story