கிணற்றில் தவறி விழுந்த முதியவர்: 3 மணி நேரத்திற்கு பின் உடல் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த முதியவர்: 3  மணி நேரத்திற்கு பின் உடல் மீட்பு
X

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த நபரை தீயணைப்புத்துறையினர் மூன்று மணி நேரமாக போராடி சடலமாக மீட்டனர்.

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த நபரை மூன்று மணி நேரமாக போராடி சடலமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்.

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த நபரை மூன்று மணி நேரமாக போராடி சடலமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (54). இவர் அப்பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கியவரை காணவில்லை என உறவினர்கள் சங்கரன்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரில் மூழ்கிய நபரை மீட்க மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மின் மோட்டார்கள் மூலம் கிணற்றில் உள்ள தண்ணீரை வெளியேற்றிய பின்னர் சடலமாக மீட்டு கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!