படுகாயங்களுடன் வந்த முதியவர்: அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் பரபரப்பு

படுகாயங்களுடன் வந்த முதியவர்: அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் பரபரப்பு
X

அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மருத்துவர் இல்லாததால் தனியார் மருத்துவமனைக்கு சென்ற விபத்தில் காயமடைந்த முதியவர்.

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்த முதியவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் இல்லாததால் பரபரப்பு.

சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்த முதியவருக்கு முறையான சிகிச்சை அளிக்க மருத்துவர் இல்லாததால் விபத்தில் காயமடைந்த முதியவர் மனம்நொந்து தனியார் மருத்துவமனைக்கு சிகிட்சைக்கு சென்றதால் பரபரப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலை அடுத்த நொச்சி குளத்தை சேர்ந்தவர் முதியவர் பிச்சையா இவர் தனது நன்பருடன் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்று கொண்டிருந்த போது பணவடலி சத்திரம் அருகே இரு சக்கர வாகனமும் காரும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பிச்சையா படுகாயங்களுடன் சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆனால் அரசு மருத்துவ மனையில் முறையான சிகிட்சை அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனம் நொந்த பிச்சையா தனியார் மருத்துவமனைக்கு தன்னை அனுப்பி வைக்கும் படி கூறியதால் பரபரப்பு நிலவியது.

தொடர்ந்து விபத்தில் காயமடைந்து நடக்க முடியாத சூழலிலும் தனது மகனின் தோளை தாங்கி பிடித்தபடி சென்றது அனைவரையும் கண்கலங்கச் செய்தது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!