சங்கரன்கோவில் அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை: போலீசார் விசாரணை

சங்கரன்கோவில் அருகே  முதியவர் விஷம் குடித்து தற்கொலை: போலீசார் விசாரணை
X

பைல் படம்

சங்கரன்கோவில் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள வயலிமிட்டா கிராமத்தை சேர்ந்தவர் நிறைபாண்டி (70). இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்த நிலையில் நிறைபாண்டி தனியாக வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில், இன்று மாலை நிறைபாண்டி தனது வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கிக்கிடந்தார். உடனடியாக உறவினர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலன்பேரில் கரிவலம் வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story