வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
சங்கரன்கோவிலில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தென்காசி மாவட்டத்தில், காலியாக உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றியக் கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், உட்பட 128 பதவிகளுக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுடன், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தனியார் தங்கும் விடுதியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில், முன்னாள் முதல்வரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு உள்ளாட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். இதில் முன்னாள் அமைச்சர்கள் இராஜலட்சுமி, கடம்பூர் ராஜீ, ஆர்.பி.உதயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் மனோஜ்பாண்டியன், கிருஸ்ணமுரளி, உள்ளிட்ட பல்வேறு அதிமுக முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் பேசிய எடப்பாடி பழநிச்சாமி கூறியதாவது: திமுக ஆட்சியில் விவசாயிகள் வஞ்சிக்கப்படுகின்றனர். கூட்டுறவு தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துவிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். தேர்தல் நேரத்தில் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றியவர் ஸ்டாலின். குடும்ப அட்டைக்கு ஆயிரம் ரூபாய் தருவோம் என்று அறிவித்தார். இதுவரைக்கும் எந்த முடிவும் எடுக்கவில்லை.
மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்றனர்; செயல்படுத்தப்படவில்லை, திமுக சார்பாக அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை எதுவுமே நிறைவேற்றப்படவில்லை, நான் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் இரத்து செய்யப்படும் என்றார். ஆனால் தற்போது வரை என்ன செய்தீர்கள்? இவ்வாறு எடப்பாடி பழநிச்சாமி பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu