புளியங்குடியில் போதையில் குடிமகன் கொலை: போலீசார் விசாரணை

புளியங்குடியில் போதையில் குடிமகன் கொலை: போலீசார் விசாரணை
X
தென்காசி அருகே புளியங்குடியில் போதையில் குடிமகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம், புளியங்குடி டி.என்.புதுக்குடி கிணற்று தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகேசன்(58). இவர் குடிபோதையில் அப்பகுதியில் உளறி கொண்டிருந்துள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த புளியங்குடி காந்தி பஜார் முடுக்கு தெருவை சேர்ந்த நாராயணன் மகன் சுந்தரம் (63), முருகேசனிடம் வாய்த் தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனயைடுத்து தகராறு முற்றியதால் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதில் முருகேசனை சுந்தரம் கீழே தள்ளியுள்ளார். இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலை சம்பவம் குறித்து தகவலறிந்து புளியங்குடி இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர்கள் பரத் லிங்கம், யோபு சம்பத் காவலர்கள் குட்டி ராஜ், திருப்பதி, சிறப்பு காவலர் மருதபாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், குடிபோதையில் கொலை செய்த சுந்தரத்தை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!