சங்கரன்கோவிலில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

சங்கரன்கோவிலில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
X

 களப்பாகுளம் பஞ்சாயத்து பகுதிகளில், திமுக வேட்பாளர் பரமகுரு, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சங்கரன்கோவில் 10வது வார்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 10வது வார்டில், திமுக சார்பில் பரமகுரு என்பவர் போட்டியிடுகிறார். இவர், களப்பாகுளம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, பரமகுருவுக்கு திமுக தொண்டர்கள், உள்ளூர் பிரமுகர்கள் மாலைகள் அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்ப் தந்தனர். பிரசாரத்தின் போது, உள்ளூர் பிரச்சனை தீர்க்கப்படும் என்று உறுதி அளித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!