சங்கரன்கோவில் காவல் நிலையங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

சங்கரன்கோவில் காவல் நிலையங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
X

சங்கரன்கோவில் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.

சங்கரன்கோவில் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் டவுன் மற்றும் தாலுகா வட்ட காவல் நிலையத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருடாந்திர ஆய்வு மேற்காெண்டார்.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS காவலர்களின் உடைபொருட்கள் மற்றும் காவல் நிலையத்தின் முக்கிய கோப்புகளை ஆய்வு செய்தார்.பின்னர் காவல் துறையினரிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், பணியில் பொறுப்புடனும் நேர்மையுடனும் திறம்பட செயல்பட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

மேலும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் விதமாக தாலுகா காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜாகீர் உசேன், காவல் ஆய்வாளர்கள் மீனாட்சி நாதன், பால் யேசுதாசன், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கல்குவாரி விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் ஸ்டாலினின் நிவாரண அறிவிப்பு!