சொத்து தகராறு- அண்ணனை தாக்கிய தம்பி கைது

சொத்து தகராறு- அண்ணனை தாக்கிய தம்பி கைது
X

தென்காசி மாவட்டத்தில் சொத்து பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் அண்ணனை தாக்கிய தம்பி கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், சின்னகோவிலாங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமசாமியாபுரம் பகுதியில் வசித்து வரும் மாடசாமி என்பவருக்கும் அவரது தம்பியான ராமர் என்பவருக்கும் இடையே சொத்து பிரிப்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மாடசாமி அவரது மாட்டுத் தொழுவத்தில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த ராமர் மாடசாமியை அசிங்கமாக பேசி இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதுகுறித்து மாடசாமி சின்னகோவிலாங்குளம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மேற்படி நபரான கருப்பன் என்பவரின் மகன் ராமர் (30) என்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!