சங்கரன்கோவில் மலையடிவாரத்தில் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள கல்வெட்டு கண்டுபிடிப்பு

சங்கரன்கோவில் மலையடிவாரத்தில் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள கல்வெட்டு கண்டுபிடிப்பு
X
கல்வெட்டைதொல்லியல்துறையினர் ஆய்வு செய்து பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

சங்கரன்கோவில் அருகே மலையடிவாரத்தில் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. தொல்லியல்துறையினர் ஆய்வு செய்து பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள, அரியூர் மலையடிவாரத்தில் முனியசாமி கோவிலின் அருகே மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் மலையடிவாரத்தில் வாழ்ந்ததாகவும், சுந்தரபாண்டிய மன்னர் பற்றிய வாழ்க்கை குறிப்பு பொறிக்கப்பட்ட பாறையில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் மலைப்பகுதிகளில் மனிதன் வாழ்ததற்கான பல்வேறு வகையான குறியிடுகள் பொறிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக தொல்லியல்துறையை சேர்ந்த நிபுணர்கள் உடனடியாக அரியூர் மலையில் உள்ள கல்வெட்டுக்கள் மற்றும் மனிதன் வாழ்நததற்கான பொறிக்கப்பட்ட அடையாளங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது