/* */

சங்கரன்கோவிலில் அனுமதி பெறாத சாயப்பட்டறைகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு

சங்கரன்கோவிலில் முறையாக அனுமதி பெறாத விசைத்தறி கூடங்களின் சாயப்பட்டறைக்கு மின் இணைப்பை மின்சார வாரியத்தினர் துண்டித்தனர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவிலில் அனுமதி பெறாத சாயப்பட்டறைகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு
X

துண்டிக்கப்பட்டுள்ள மின் இணைப்பு.

சங்கரன்கோவிலில் முறையாக அனுமதி பெறாத விசைத்தறி கூடங்களின் சாயப்பட்டறைக்கு செல்லக்கூடிய மின்சாரத்தை துண்டித்த மின்சார வாரியத்தினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் இயங்கி வருகின்றன. இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட சாயப்பட்டரைகள் இயங்கி வருகின்றது. ஒரு சில சாயப்பட்டறைகள் மட்டும் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்று சாய கழிவுகளை சுத்திகரிப்பு செய்து வெளியேற்றி வருகின்றனர். மற்ற சாயப்பட்டறைகள் அனைத்தும் முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றி வருவதால் குளங்கள் மற்றும் விவசாய இடங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

இதனைதொடர்ந்து முறையாக அனுமதி பெறாமல் இயங்கும் சாயப்பட்டறைளுக்கு செல்லும் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் என சங்கரன்கோவில் மின்சார வாரியத்திற்கு மாசுகட்டுப்பாட்டும் வாரிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து அனுமதியில்லாமல் செயல்பட்டு வரும் சாயப்பட்டறைக்கு செல்லக்கூடிய மின்சாரத்தை மின்கம்பத்திலே மின்சார வாரிய ஊழியர்கள் துண்டிப்பு செய்ததால் சாயப்பட்டறை உரிமையாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 3 March 2022 11:45 AM GMT

Related News