சங்கரன்கோவிலில் தீயணைப்புத்துறையினர் பேரிடர் கால பாதுகாப்பு ஒத்திகை
சங்கரன்கோவிலில் தீயணைப்புத்துறையினரின் பேரிடர் கால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
சங்கரன்கோவில் தீயணைப்புத்துறையினரின் சார்பில் மழை, புயல், வெள்ளம், தீ ஆகியவற்றில் இருந்து தற்கொத்து கொள்வதற்கான பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தீயணைப்பு நிலையம் சார்பில் இன்று காலை 7:00மணிக்கு உழவர் சந்தையில் வட்டாட்சியர் ராம்குமார் தலைமையில் உதவி வேளாண்மை அலுவலர் மரகதவள்ளி முன்னிலையில் பொதுமக்களுக்கு பேரிடர் காலங்களில் வெள்ளம் மற்றும் இடி மின்னல் விஷ ஜந்துக்கள் ஆகியவற்றிலிருந்து தப்பிப்பது எப்படி என்ற போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
பண்டிகை காலங்களில் பாதுகாப்பாக பட்டாசு வெடி போடுவது எப்படி என்ற விளக்கமும் தீ விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்ற போலி ஒத்திகை பயிற்சி தீயணைப்பு பணியாளர்கள் மற்றும் நிலைய அலுவலர் விஜயன் உட்பட பொது மக்களுக்கு பயிற்சியும் விளக்கமும் அளிக்கப்பட்டது. இதில் வழக்கறிஞர் தாமஸ் MABL மற்றும் ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu