செண்பகவல்லி அணையின் உடைப்பை சரி செய்ய இயக்குநர் கௌதமன் காேரிக்கை

சங்கரன்கோவில் அருகே உள்ள தலையணையில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள செண்பகவல்லி அணைகட்டின் உடைப்பை இயக்குநர் கெளதமன் பார்வையிட்டார்.
சங்கரன்கோவில் அருகே உள்ள தலையணை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள செண்பகவல்லி அணையின் உடைப்பை சரிசெய்ய வேண்டும் என்று தமிழ் பேரரசு கட்சியின் தலைவரும் இயக்குநருமான கௌதமன் செய்தியாளர்களுக்கு பேட்டி.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தலையணையில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள செண்பகவல்லி அணைகட்டின் உடைப்பை பார்வையிட தமிழ் பேரரசு கட்சியின் தலைவரும் இயக்குநருமான கௌதமன் சென்றார். அப்போது அவருக்கு உள்ளே செல்வதற்கு புளியங்குடி வனத்துறையினர் அனுமதி மறுத்தனர். பின்னர் கௌதமன் தமிழக வனத்துறை அமைச்சரிடம் பேசியதன் பின் செண்பகவல்லி அணையின் ஒரு பகுதி தண்ணீர் பாயும் தலையணையின் உள்ளே அனுமதிக்கபட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் செண்பகவல்லி அணையின் உடைப்பு ஏற்பட்டு தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீர் அனைத்தும் கேரளா மாநிலத்தை நோக்கி செல்வதால் தமிகத்தில் பல ஏக்கர் கணக்கில் விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக காணப்பட்டது. இந்த அணையின் உடைப்பை சரிசெய்ய வேண்டும் என்று பல்வேறு விவசாய சங்கங்கள் பல்வேறு கட்டமாக போராட்டங்கள் நடத்தியும், பல்வேறு முறை கோரிக்கை விடுத்தும் எந்த வித பலனும் அளிக்கவில்லை. மேலும் நீதிமண்றம் உத்தரவிட்டும் கேராள அரசு கண்டுகொள்ளவில்லை.
எனவே தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் செண்பகவல்லி அணையின் உடைப்பை சரிசெய்தால் தமிழகத்தில் தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை உட்பட ஐந்து மாவடத்தில் உள்ள ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தமிழ் பேரரசு கட்சியின் தலைவரும் இயக்குநருமான கௌதமன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu