சங்கரன்கோவில்: திருச்செந்தூருக்கு பறவை காவடி எடுத்துச்சென்ற பக்தர்கள்

சங்கரன்கோவில்: திருச்செந்தூருக்கு பறவை காவடி எடுத்துச்சென்ற பக்தர்கள்
X

சங்கரன் கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு பக்தர்கள் பறவை காவடி எடுத்து சென்றனர்.

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு 2 பக்தர்கள் பறவை காவடி எடுத்துச் சென்றனர்.

சங்கரன்கோவில் தாலுகா குருக்கள் பட்டியை சேர்ந்த அல்லிராஜ், முருகன் ஆகிய இருவரும் சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு பறவை காவடி எடுத்து செல்ல நேத்திக்கடன் செலுத்தியிருந்தனர்.

அதன்படி இருவரும் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் இருந்து அலகு குத்தி பறவை காவடி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அங்கிருந்து பறவை காவடி எடுத்து திருச்செந்தூருக்கு புறப்பட்டனர். பறவை காவடி வாகனம் திருவனந்தபுரத்திலிருந்து பிரத்யகமாக செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்