சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த புள்ளி மான் பத்திரமாக மீட்பு

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த புள்ளி மான் பத்திரமாக மீட்பு
X
சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த புள்ளி மானை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புளியம்பட்டி கிராமத்தின் மேல்புறம் உள்ள மலையையை ஒட்டியுள்ள குருசாமி என்பருக்கு சொந்தமான கிணறு உள்ளது. இதில் புள்ளிமான் ஒன்று விழுந்து, உயிருக்கு போராடி கொண்டிப்பதாக சங்கரன்கோவில் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் கிணற்றில் உள்ள தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த இரண்டு வயது மதிக்கத்தக்க புள்ளிமான பத்திரமாக மீட்டனர். பின்னர் அந்த புள்ளிமானனது புளியங்குடி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!