சங்கரன்கோவில் அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்: விவசாயிக்கு வலைவீச்சு

சங்கரன்கோவில் அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்: விவசாயிக்கு வலைவீச்சு
X
சங்கரன்கோவில் அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த விவசாயியை போலீஸ் தேடி வருகின்றனர்.

சங்கரன்கோவில் அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்: விவசாயிக்கு போலீஸ் வலைவீச்சு.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு குருவிகுளம் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன்(45). இவர் அலுவலகத்தில் இருந்த போது குருவிகுளத்தை சேர்ந்த விவசாயி வேலுச்சாமி என்பவர் பிரச்சனைக்குரிய நிலத்திற்கு பயிர் காப்பீட்டு செய்யக் கூறினார்.

இதனை கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் மறுக்கவே, விவசாயி வேலுச்சாமி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின்பேரில் கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த விவசாயி வேலுச்சாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!