பள்ளி அருகில் சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டி: அகற்ற கிராம மக்கள் கோரிக்கை

பள்ளி அருகில் சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டி: அகற்ற கிராம மக்கள் கோரிக்கை
X

ஆராய்ச்சிபட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தாெட்டி.

பள்ளிக்கூடம் அருகே பழுதடைந்த நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டியால் விபத்து ஏற்படும் அபாயம். அகற்ற கிராம மக்கள் கோரிக்கை.

சங்கரன்கோவில் அருகே பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அருகாமையில் உள்ள பள்ளிக்கூடம் விபத்து ஏற்படும் முன்னரே அகற்ற கிராம மக்கள் கோரிக்கை.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆராய்ச்சிபட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அதன் அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இதனையடுத்து அங்கன்வாடி மையத்தில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடத்திற்கும் அங்கன்வாடி மைய கட்டிடத்திற்கும் நடுவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியானது பழுதடைந்து மோசமான நிலையில் எப்போது வேண்டுமனாலும் விழும் தருவாயில் நின்று கொண்டிருக்கிறது. மேலும் பேராபத்து ஏற்படும் முன்னரே அந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்றி சீரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உட்பட பல்வேறு அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும் எந்தவித பயனும் இல்லை என தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் உடனடியாக பேராபத்து ஏற்படும் முன்னரே இதனை சரி செய்ய வேண்டும் என பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....