விழும் நிலையில் அங்கன்வாடி கட்டிடம்: விழித்துக்கொள்ளுமா நிர்வாகம்?

விழும் நிலையில் அங்கன்வாடி கட்டிடம்:  விழித்துக்கொள்ளுமா நிர்வாகம்?
X

இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டிடம்.

சங்கரன்கோவில் அருகே, கட்டி முடிக்கப்பட்டு 10 வருடங்கள்கூட முடியாத நிலையில், அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, இருமன்குளம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில், இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

குழந்தைகள் பயின்று வரும் இந்த கட்டிடமானது, பத்து வருடங்கள் கூட முழுமையாக நிறைவடையாத நிலையில், கட்டிடத்தின் உட்புற மற்றும் வெளிப்புற சுவர்கள் அனைத்திலும் கீறல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமனாலும் இடிந்து விழும் நிலையில் இருந்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டாமால், இனியாவது விழித்துக் கொண்டு, இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தை புதுப்பித்து தர வேண்டும் என்பது, இருமன்குளம் கிராம மக்களின் கோரிக்கையாகும்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!