சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த மாடு: உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த மாடு: உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்
X

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை மீட்கும் தீயணைப்பு துறையினர்.

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு பனவடலிசத்திரம் கீழத்தெருவைச்சேர்ந்த முருகன் என்பவரது 60ஆயிரம் மதிப்புடைய பசுமாடு வீட்டருகிலுள்ள 35அடி ஆழ கிணற்றில் விழுந்தது.

உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மாவட்ட அலுவலர் கவிதா உத்தரவின்படி, நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் கருப்பையா, நிலைய அலுவலர் (போவ) ஜெயராஜ் ,சிறப்பு நிலைய அலுவலர் (போவ) வேலுச்சாமி ஆகியோர் பணியாளர்களுடன் விரைந்து சென்று பொதுமக்கள் ஒத்துழைப்புடன் மாட்டை துறை உபகரணம் உதவியுடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து மாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினருக்கு உரிமையாளர் மற்றும் ஊர்பொதுமக்கள் பெரிதும் பாராட்டினார்கள்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings