இறப்பிலும் இணை பிரியாத தம்பதி- பொதுமக்கள் சோகம்

திருவேங்கடம் அருகே கணவன் இறந்த செய்தி கேட்டு துக்கம் தாங்காமல் மனைவியும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள குலசேகரன் கோட்டை பகுதியை சேர்ந்த சண்முகவேல், ஜிஜி பாய் தம்பதி. இவர்கள் இருவரும் அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று அதன் பின்னர் தங்களது சொந்த கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை திடீரென உடல் நலக்குறைவு காரணமாக சண்முகவேல் படுக்கை அறையில் மயங்கிய நிலையில் இருந்து உள்ளார்.

அவரது அறைக்கு வந்த மூத்த மகன் தந்தையை எழுப்ப முயன்ற போது அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனடியாக பக்கத்து அறையில் இருந்த தாயாரிடம் இது குறித்து தெரிவிக்கும் போது அதிர்ச்சி அடைந்த தாயாரும் மயங்கிய படியே கீழே விழுந்து அவரும் உயிரிழந்தார். பிரிவின் போது கூட இணை பிரியாத தம்பதிகள் என வாழ்ந்து விட்டு சென்றது அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!