ஒப்பந்தப்படி கூலி உயர்வு: விசைத்தறி உரிமையாளர்கள் தர்ணா பாேராட்டம்

சங்கரன்கோவிலில் விசைத்தறிதொழிலாளர்களின் கூலி உயர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவிலில் விசைத்தறிதொழிலாளர்களின் கூலி உயர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் மாஸ்டர் வீவர்ஸ் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. அதில் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
தொழிலாளர்கள் அனைவரும் கூலி உயர்வு கேட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த 25-5-2021அன்று சங்கரன்கோவில் வட்டாச்சியர் அலுவலகத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் 10 சதவீத கூலி உயர்வு தரப்படும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதுவரை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூலி உயர்வு வழங்கப்படாதை கண்டித்து சங்கரன்கோவில் விசைத்தறி உரிமையாளர்களின் சங்கமான மாஸ்டர்ஸ் வீவர்ஸ் அலுவலகம் முன்பு கூலி உயர்வு ஒப்பந்ததை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu