ரூ.47 லட்சம் மோசடிக்கு உடந்தை: அதிமுக முன்னாள் யூனியன் சேர்மன் வீட்டுமுன் தர்ணா
சங்கரன்கோவில் அருகே அதிமுக முன்னாள் யூனியன் சேர்மன் முருகையா வீட்டின் முன்பு கேரளாவைச் சேர்ந்த பிரவீன் என்பவர் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
சங்கரன்கோவில் அருகே அதிமுக முன்னாள் யூனியன் சேர்மன் முருகையா 47 இலட்சம் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகவும் அதை வாங்கி தர கோரியும் அவரது வீட்டின் முன்பு கேரளாவைச் சேர்ந்த பிரவீன் என்பவர் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபின் அகஸ்தி என்பவர் ஏலக்காய் தோட்டத்தை விலைக்கு வாங்குவதற்காக குறைந்த வட்டியில் 10 கோடி ரூபாய் கடனாக வாங்கி தர கோரி கேரளாவை சேர்ந்த குமார், பாபு ஆகிய இருவரை அனுகியுள்ளார். இவர்கள் இருவரும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள் பட்டி கிராமத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் யூனியன் சேர்மன் முருகையாவிடம் பிரபினை அழைத்து வந்துள்ளனர். முருகையா மதுரை மாவட்டம் சேடப்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை அறிமுகம் செய்து வைத்து ரூ.10 கோடி கடன் பெறுவதற்கு முன்பனமாக இரண்டு தவனையாக பிரபின் கடந்த 2019ம் ஆண்டு 47இலட்சம் ரூபாய் முன்னாள் யூனியன் சேர்மன் முருகையா முன்னிலையில் இராஜேந்திரனிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனைதொடர்ந்து ராஜேந்திரன் வங்கியில் கடன் பெற்று தருவார் என பலமாதங்களாக காத்திருந்த பிரபின் அகஸ்தி பலமுறை ராஜேந்திரன் வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார். முறையாக பதில் கூறாததால் நான் கொடுத்த 47இலட்சம் ரூபாய் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார் அதனால் ஆத்திரமடைந்த இராஜேந்திரன் பிரபினை தாக்கியதாக கூறப்படுகிறது. அதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த கேரளாவை சேர்ந்த பிரபின் அகஸ்தி குடும்பத்துடன் தனக்கு வங்கி கடன் பெற்று தருவதாக மோசடி செய்த 47இலட்சம் ரூபாய் பணத்தை வாங்கி தர வேண்டும் என மதுரை தென்மண்டல காவல்துறை தலைவரிடம் பிரபின் புகார் அளித்துள்ளார்.
காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டும் வரும் நிலையில் 47இலட்ம் ரூபாய் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக கூறி கேரளாவை சேர்ந்த பிரபின் தன்னுடைய மனைவி, இரண்டு குழந்தைகளுடன் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி கிராமத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் யூனியன் சேர்மன் முருகையா வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu