ஏர்வாடியில் காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மாவட்ட செயற்குழு கூட்டம்

ஏர்வாடியில் காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மாவட்ட செயற்குழு கூட்டம்
X

ஏர்வாடியில் காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

ஏர்வாடியில் காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மாவட்ட செயற்குழு கூட்டம்

ஏர்வாடியில் காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மாவட்ட செயற்குழு கூட்டம் நெல்லை கிழக்கு மாவட்டம் சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் மற்றும் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி. ஆர்..மனோகரன் ஆலோசனையின் பெயரில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் வழிகாட்டுதலின்படி, ஏர்வாடியில் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தலைவர் ராபர்ட் சுஜின் தலைமை வகித்தார்.கூட்டத்தில், கட்டுமான தொழிலாளர்களுக்கு மழைக் காலங்களில் தொழில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே ஏழை கட்டிட தொழிலாளர்கள் வருமானத்தை ஈடுகட்டும் வகையில் மழை காலங்களில் விடுப்பு தொகை கொடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் செயற்குழு நிர்வாகிகள் . குமார் பொருளாளர், கமலா செயலாளர், .லீலாவதி துணை தலைவர், செயலாளர் .முரளி கிருஷ்ணா, இராதாபுரம் சட்டமன்ற தொகுதி துணை தலைவர் ஜான் சேவியர், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி துணை தலைவர் ஜோஷ்வா ( ஆட்டோ ) ஏர்வாடி நகர தலைவர் மொபைல் ரபீக், செயற்குழு உறுப்பினர்கள் மாய கிருஷ்ணன், ரமேஷ், ரஹீம், சுடலைமுத்து மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர், கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, முடிவில் செயலாளர் முரளி கிருஷ்ணா நன்றி கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!