குருவிகுளத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு: எம்எல்ஏ பங்கேற்பு
குருவிகுளத்தில் நடந்த கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் எம்எல்ஏ ராஜா கலந்து கொண்டார்.
திருவேங்கடம் தாலுகா குருவிகுளத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தங்கம்மாள் தலைமை வகித்தார், குருவிகுளம் பஞ்சாயத்து தலைவர் லலிதா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சங்கரன்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜா கலந்து கொண்டு சுமார் 50 கர்ப்பிணிப் பெண்களுக்கு சேலை, மஞ்சள் குங்குமம், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கினார். தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திமுக குருவிகுளம் ஒன்றிய செயலாளர் கடற்கரை, நகர செயலாளர் செந்தில், குருவிகுளம் மேற்கு மற்றும் கிழக்கு பகுதி ஒன்றிய செயலாளர்கள் சேர்மதுரை, கிறிஸ்டோபர், களப்பாளங்குளம் பஞ்சாயத்து தலைவர் ஜெய்சங்கர், கலை இலக்கிய பிரிவு கண்ணன், ஒன்றிய மாணவரணி செந்தில்நாதன், தகவல் தொழில் அணி சுந்தரபாண்டியன், ஒன்றிய கவுன்சிலர்கள் மணிமாலா, கணேசன், சமூக ஆர்வலர் அழகை கண்ணன், திமுக மாவட்ட நெசவாளர் அணி குமார்சங்கர் மற்றும் திமுக நிர்வாகிகள் குருசாமி, கலைசெல்வன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், கர்ப்பிணி பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu