சங்கரன்கோவிலில் பெண்ணிடம் ஐந்து பவுன் தங்க செயின் பறிப்பு

சங்கரன்கோவிலில் பெண்ணிடம்  ஐந்து பவுன் தங்க செயின் பறிப்பு
X

கொள்ளை நடந்த வீடு.

சங்கரன்கோவிலில், கால்நடை மருத்துவரின் மனைவி அணிந்திருந்த ஐந்து பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அச்சம்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவர் புஷ்பராஜின் வீடு உள்ளது. நள்ளிரவில் கதவை உடைத்து சென்ற மர்ம நபர்கள், தூங்கி கொண்டிருந்த அவரது மனைவி அருள்செல்வி கழுத்தில் அணிந்திருந்து ஐந்து பவுன் மதிப்புள்ள தங்க செயினை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

தகவலறிந்த தாலூகா காவல்துறையினர், கொள்ளை குறித்து தடவியல் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கால்நடை மருத்துவரின் வீட்டை உடைத்து கொள்ளை நடந்த சம்பவம் குறித்து, அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!