சங்கரன்கோவில் அருகே மேற்குதொடர்ச்சி மலையில் மத்திய வனத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

சங்கரன்கோவில் அருகே உள்ள மேற்குதொடர்ச்சி மலையில் பத்திற்கும் மேற்பட்ட மத்திய வனத்துறையை சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு.
தமிழ்நாடு உயிர்பண்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் ஜப்பான் அரசு தமிழகத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் வரை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மேற்குதொடாச்சி மலையில் உள்ள இயற்கை வனங்கள் மற்றும் வன உயினங்கள் பாதுகாக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கு கடந்த பத்து ஆண்டுகளாக நிதி கொடுத்த நிதிகள் அனைத்தும் முறையாக செலவு செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்ய மத்திய அரசு நெல்லை வன உயிரின பாதுகாப்பு மண்டலத்திற்கு இருபது பேர் கொண்ட குழுவை அனுப்பியுள்ளது.
இதணையடுத்து மத்திய அரசின் பத்துப்பேர் கொண்ட ஒரு குழுவினர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடி, சிவகிரி மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள தலையனையில் மாவட்ட வன அலுவலர் கௌதம் தலைமையில் ஆலோசனை மேற்கொண்டனர்.
பின்னர் இரண்டு குழுக்களாக பிரிந்து புளியங்குடி, சிவகிரி பகுதியில் சுரேஷ், ஸ்டாலின் ஆகிய இரண்டு வனச்சரகர்கள் தலைமையில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிக்குள் கட்டப்பட்டுள்ள தடுப்பனைகள், யானைகள் வனத்தை விட்டு வெளியில் செல்லாமல் இருக்க அமைக்கப்பட்டுள்ள அகழிகள் மற்றும் வன உயிரினங்களுக்கு தேவையான குடிதண்ணீர் கிடங்கு, கனிம வளங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றதை மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆய்வுகளின் நிறைகள், குறைகள் பற்றிய அனைத்து அறிக்கைகளும் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். எந்தவித முன் அறிவிப்பின்றி சங்கரன்கோவில் அருகே உள்ள மேற்குதொடர்ச்சி மலையில் மத்திய அரசுத்துறையை சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவது அப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் மத்தியில் மிகுந்த அச்சத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu