கோவில்பட்டி பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிதிரிந்த பிரபல ரவுடிகள் கைது

கோவில்பட்டி பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிதிரிந்த பிரபல ரவுடிகள் கைது
X

கைது செய்யப்பட்ட ரவுடிகள் உள்ளிட்ட 4 பேர்.

கோவில்பட்டி பகுதியில் அரிவாள் மற்றும் வாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிதிரிந்த பிரபல ரவுடிகள் 3 பேர் உட்பட 4 பேர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மெயின்ரோடு பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அரிவாள் மற்றும் வாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மர்மநபர்கள் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் தனிப்பிரிவு காவலர் அருண் விக்னேஷ் தகவல் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் தலைமையில் தனிப்படை போலீசார் ரோந்து மேற்கொண்டனர்.

அப்போது கோவில்பட்டி, வள்ளுவர் நகர், சங்கரலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர்களான வமந்திரமூர்த்தி (29),கருப்பசாமி (20), மந்திரமூர்த்தி, மதன்குமார் ஆகிய 4 பேர் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்து வகையிலும் அரிவாள் மற்றும் வாள் போன்ற பயங்கரமான ஆயுதங்களுடன் சுற்றி திரிந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து தனிப்படை போலீசார் 4 பேரையும் இன்று கைது செய்தனர். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யபட்டவர்களில் 4 பேர் மீதும் கொலை கொள்ளை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!