கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலைய எல்லை பகுதிகளில் சிசிடிவி காமெரா பொருத்த வேண்டும்

அனைத்து கிராம பகுதிகளில் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா அமைக்கும் பட்சத்தில் குற்றச்சம்பவங்களை வெகுவாகக் குறைக்கலாம்

கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 72 கிராமங்களின் 123 ஊர் நாட்டாமைகளுடன் காவல் ஆய்வாளர் சிசிடிவி கேமரா அமைப்பதன் அவசியம் குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் தனியார் திருமண மண்டபத்தில் கரிவலம்வந்தநல்லூர் காவல் ஆய்வாளர் காளிராஜ் தலைமையில் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், காவல் ஆய்வாளர் காளிராஜ் பேசியதாவது, குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க என்னென்ன வழிமுறைகள் உள்ளன என்பது பற்றியும், இதனை அடுத்து அனைத்து கிராம பகுதிகளில் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கும் பட்சத்தில் குற்ற சம்பவங்களை முற்றிலும் குறைக்கலாம் என்றும், அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், இதில், கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 72 கிராமங்களில் பல்வேறு சமுதாயங்களை சேர்ந்த 123 ஊர் நாட்டாண்மைகள், காவல் உதவி ஆய்வாளர் சங்கரநாராயணன் மற்றும் தலைமை காவலர்கள் காவலர்கள் முருகன், முத்துசெல்வி, பேச்சியம்மாள், ராமர் பாண்டியன், குற்றாலச்சாமி, காளிராஜ், ஆறுமுகக்கனி உள்பட அனைத்து பகுதிகளின் ஊர் நாட்டாமைகளும் கலந்து கொண்டனர். முன்னதாக, அனைவருக்கும் சமூக நட்புறவை ஏற்படுத்தும் வகையில் சால்வை அணிவிக்கப்பட்டது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil