சங்கரன்கோவில் அருகே மரத்தில் கார் மோதி மூன்று பேர் பலத்த காயம்

சங்கரன்கோவில் அருகே மரத்தில் கார் மோதி மூன்று பேர் பலத்த காயம்
X

விபத்துக்குள்ளான கார். 

சங்கரன்கோவில் அருகே புளியமரத்தின் மீது கார் மோதியதில் மூன்று பேர் பலத்த காயங்களுடன்; அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் முதல், புளியங்குடி செல்லும் சாலையில், வீரிருப்பு அருகே சங்கரன்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்த கார், நிலை தடுமாறி சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது மோதியது. இதில், காரில் பயணம் செய்த அங்கன்வாடி பணியாளர் மகேஸ்வரி, சண்முகத்தாய், சங்கரநாராயணன் ஆகிய மூன்று பேரும் பலத்த காயங்களுடன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்தில், மேலும் இரண்டு குழந்தைகள் எந்தவித காயங்கள் இன்றி உயிர் தப்பின. விபத்து குறித்து சங்கரன்கோவில் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!