சங்கரன்கோவில் அருகே முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

சங்கரன்கோவில் அருகே கிடைத்த முதுமக்கள் தாழி
மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து பல்வேறு கால சூழ்நிலைகளையும் பரிமாற்றங்களையும் கடந்து வாழ்ந்து வருகின்றான். கற்காலம் தொட்டு தான் வாழ்ந்த பதிவுகளை பிற்கால சந்ததிக்கு தெரியும் வகையில் கல்வெட்டுக்கள், குகை ஓவியங்கள், என பல வகைகளில் பதிவு செய்துள்ளான்.
பெரும்பாலான நாகரிகங்கள் ஆற்று படுக்கைகளில் உருவாகியதாக வரலாறு உண்டு. காலப்போக்கில் ஆறுகளில் வழித்தடங்கள் மாறி நாகரிகங்கள், வாழ்ந்த மனிதர்கள் இடம் பெயர்வதுண்டு. அப்போது பகுதிகளில் தங்களது அடையாளங்களை அப்படியே விட்டு சென்று விடுகின்றனர்.
தற்போது தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பழங்கால முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . எனவே இங்கு அகழ்வாய்வு செய்ய தொல்பொருள் ஆய்வுத்துறை மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தாருகாபுரம் பகுதியில் உள்ள மலைகளில் சரிவுகளில் முதுமக்கள் தாழி தற்போது கிடைக்கப்பட்டுள்ளது.
தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணியாளர்கள் ஓடைகளை தூர் வாரும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆங்காங்கே முதுமக்கள் தாழிகளின் படிமங்கள் கிடைத்துள்ளது. இதனை எடுத்து தொல்பொருள் ஆய்வுத்துறை மாணவர் விஜயகுமார் என்பவர் இதனை அரசு தரப்புக்கு தெரியப்படுத்தி இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை மற்றும் தமிழக அரசு இந்த பொதுமக்கள் தாளியை ஆய்வு செய்து இப்பகுதிகளில் அகழாய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளார்.
ஏற்கனவே தமிழகம் முழுவதும் நாகரீக வளர்ச்சியில் அடிப்படை படிமங்கள் கிடைத்துவரும் நிலையில் சங்கரன்கோவில் அருகே உள்ள தாருகாபுரம் கிராம பகுதியில் உள்ள மலையடிவாரங்களில் கிடைத்துள்ள இந்த முதுமக்கள் தாழி தரவுகள் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu