சங்கரன்கோவிலில் குண்டும் குழியுமான சாலைகள்: போலீசாருடன் சரி செய்த அதிமுகவினர்

சங்கரன்கோவிலில் குண்டும் குழியுமான சாலைகள்: போலீசாருடன் சரி செய்த அதிமுகவினர்
X

 சங்கரன்கோவிலில் குண்டும் குழியுமான சாலைகளை போக்குவரத்து காவல்துறையின் உதவியோடு அதிமுகவினர் சரி செய்தனர்.

சங்கரன்கோவிலில் குண்டும் குழியுமான சாலைகளை போக்குவரத்து காவல்துறையின் உதவியோடு சரி செய்த அதிமுகவினர்.

சங்கரன்கோவிலில் குண்டும் குழியுமான சாலைகளை போக்குவரத்து காவல்துறையின் உதவியோடு சரி செய்த அதிமுகவினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பிரதான சாலைகளான திருவேங்கடம் சாலை ராஜபாளையம் மெயின் ரோடு சாலைகளின் சந்திப்பு பகுதி மற்றும் வடக்கு ரதவீதி பகுதிகளில் மிகவும் குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு மிகவும் இடையூறாக காட்சியளித்தது.

இது சம்பந்தமாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கும் நகராட்சி நிர்வாகத்திற்கும் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அந்த சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். இதனையடுத்து இந்த சாலையை போக்குவரத்து காவல் துறையினருடன் இணைந்து அதிமுகவை சேர்ந்த மருத்துவர் திலீபன் ஜெய்சங்கர் தனது சொந்த செலவில் மண் மற்றும் கற்களைக் கொண்டு சாலையில் உள்ள குழிகளை நிரப்பி சுலபமான போக்குவரத்துக்கு வழி செய்தார்.

இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சங்கரன்கோவில் போக்குவரத்து காவல் துறையையும் அதிமுகவை சேர்ந்த மருத்துவர் திலீபன் ஜெய்சங்கரையும் வெகுவாக பாரட்டினர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!