சங்கரன்கோவிலில் பாலீஷ் போடுவதாகக் கூறி நகை திருட்டு: பீகார் இளைஞர் கைது

சங்கரன்கோவிலில் பாலீஷ் போடுவதாகக் கூறி நகை  திருட்டு: பீகார் இளைஞர் கைது
X

கைதான பீகார் மாநிலத்தை சேர்ந்த அமித்குமார்.

சங்கரன்கோவிலில் பாலீஷ் போடுவதாகக் கூறி நகை திருட்டில் ஈடுபட்டதாக பீகார் இளைஞர் போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பாரதியார் 4-ம் தெருவை சேர்ந்தவர் பழனி மகன் ராமலிங்கம்(40). இவரிடம் பீகார் மாநிலம் ஜாடியா பகுதியை சேர்ந்த அமித்குமார்(30) என்பவர் தங்க நகைகளுக்கு பாலீஷ் போடுவதாக தெரிவித்துள்ளார்.

இதனை உண்மை என்று கருதிய ராமலிங்கம், 27 கிராம் எடையுள்ள ரூ.1 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை எடுத்து அமீத்குமாரிடம் கொடுத்து பேசி கொண்டிருந்தார்.

பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்து வந்தபோது, அந்த நகைகளை திருடி சென்று தப்ப முயன்றுள்ளார். இதனையடுத்து ராமலிங்கம் உறவினர்கள் உதவியுடன் அமித்குமாரை பிடித்து சங்கரன்கோவில் டவுண் காவல்நிலையத்தில் புகாரளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அமீத்குமாரை கைது செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!