சங்கரன்கோவிலில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை: ஊழியர்களுக்கு பாராட்டு

சங்கரன்கோவிலில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை: ஊழியர்களுக்கு பாராட்டு
X

சங்கரன்கோவிலில் 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு செல்லும் பாேது வழியிலேயே பால்தாய் என்பவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

சங்கரன்கோவிலில் 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு செல்லும் பாேது வழியிலேயே பால்தாய் என்பவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

சங்கரன்கோவிலில் 108ஆம்புலன்ஸில் பால்தாய்(26) என்பவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சென்னிகுளம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராசு மனைவி பால்தாய்(26) பிரசவ வலி ஏற்பட்டதன் காரணமாக சுப்புலாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர் அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றிக் கொண்டு வரும்போது குவளைக்கண்ணி கிராமம் அருகே அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் தங்கமாரி ஓட்டுநர் கருப்பசாமி ஆகிய இருவரும் குழந்தையை பாதுகாப்பான முறையில் எடுத்து வந்து சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதனால் 108 ஆம்புலன்ஸ் டிரைவரையும் மருத்துவ உதவியாளரையும் அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Tags

Next Story
கல்குவாரி விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் ஸ்டாலினின் நிவாரண அறிவிப்பு!