ஏவிகே கல்வி குழுமத் தலைவர் அய்யாத்துரைப் பாண்டியனுக்கு திருப்பணிச் செம்மல் விருது

திருப்பணி செம்மல் விருது பெற்ற ஏவிகே கல்வி குழுமத் தலைவர் அய்யாத்துரைப் பாண்டியன்.
சங்கரன்கோவிலில் ஏவிகே. கல்விகுழும தலைவருக்கு திருப்பணி செம்மல் விருது பசியில்லா சங்கரன்கோவில் அறக்கட்டளையின் சார்பாக வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதிகளில் ஏவிகே கல்வி குழுமத்தின் தலைவர் எஸ்.அய்யாத்துரைப்பாண்டினுக்கு திருப்பணிச்செம்மல் விருது பசியில்லா சங்கரன்கோவில் அறக்கட்டளையின் சார்பில் அதன் இயக்குநர் சங்கரசுப்பிரமணியன், கலைஞர் அகாடமியின் ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் ஆகியோர் வழங்கினார்கள். விஐபி அறக்கட்டளை சேர்மன் அழகுராஜா. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பணிசெம்மல் எஸ்.அய்யாத்துரைப்பாண்டியன் தன்னுடைய சொந்த செலவில் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு கோவில்களுக்கு பல இலட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. மேலும் அனைத்து ஏழை, எளிய மக்கள் உட்பட அனைத்து மதத்தினருக்கும் கொரோனா காலகட்டத்தில் அரிசி, காய்கறிகள், மளிகைப்பொருட்கள் வழங்கினார் இவரது மகத்தான சேவையை அனைத்து தரப்பு பொதுமக்களும் மனதார பாராட்டுவதுண்டு.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu