50க்கும் மேற்பட்ட மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தீபாவளிக்காக புத்தாடை வாங்கிக் கொடுத்த சட்டமன்ற உறுப்பினர்!

50க்கும் மேற்பட்ட மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தீபாவளிக்காக புத்தாடை வாங்கிக் கொடுத்த சட்டமன்ற உறுப்பினர்!
X
50க்கும் மேற்பட்ட மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா தீபாவளிக்காக புத்தாடை வாங்கிக் கொடுத்தார் !

சங்கரன்கோவிலில் 50க்கும் மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை ஜவுளி கடைக்கு அழைத்துச் சென்று தீபாவளி பண்டிகைக்கு புத்தாடைகள் வாங்கி கொடுத்து மகிழ்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள மனவளர்ச்சிக்கு குன்றிய பள்ளியில் பயிலும் 50க்கும் மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை ஜவுளி கடைக்கு அழைத்துச் சென்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா தீபாவளி பண்டிகைக்காக குழந்தைகளின் அவரவர் தேவைக்கு ஏற்ப புத்தாடைகளை வாங்கி கொடுத்து மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தார். புத்தாடைகளைப் பெற்றுக் கொண்ட மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் அனைவரும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை அழைத்துச் சென்று புத்தாடைகள் வாங்கிக் கொடுத்தனால் பொதுமக்கள் அனைவரும் சட்டமன்ற உறுப்பினர் ராஜாவின் இச்செயலை பாராட்டி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!