சங்கரன்கோவில் ஒன்றிய வாக்கு எண்ணும் மையத்தில் ஏற்பாடுகள் தீவிரம்

சங்கரன்கோவில் ஒன்றிய வாக்கு எண்ணும் மையத்தில் ஏற்பாடுகள் தீவிரம்
X

வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் பணிகள்.

சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர் ஒன்றிய வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர்கள், முகவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், குருவிகுளம், மேலநீலிதநல்லூர் ஆகிய மூன்று ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் அருகில் உள்ள தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைதொடர்ந்து நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி. வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் அதிகளவில் வர வாய்ப்புள்ளதால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தடுப்புகள் அமைத்து, வாக்கு எண்ணிக்கை குறித்து அறிவிப்பு செய்ய ஒலிபெருக்கி அமைக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!